Wednesday, 24 July 2013

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் நடிகைகள் அஞ்சலி Actress Manjula body cremated

நடிகை மஞ்சுளா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, ராதாரவி, சந்திரசேகர், அதர்வா, மன்சூர் அலிகான், சிங்கமுத்து, ராஜா, நடிகைகள் ஜோதிகா, ஸ்ரேயா ரெட்டி, டைரக்டர்கள் சேரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சுளா உடல் பிற்பகல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அப்போது அவரது கணவரும், நடிகருமான விஜயகுமார், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர் கதறி அழுதனர்.
பின்னர் மஞ்சுளா உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கணவரும் நடிகருமான விஜயகுமார் தீ மூட்டினார்.
மஞ்சுளா மறைவுக்கு நடிகர், நடிகைள் டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா இல்லாமல் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. அவர் அழகான பெண் ரொம்ப நேசிக்கிறேன். எனது குழந்தைகள் அன்பான பாட்டியை இழந்துள்ளனர். எனக்கும் சுந்தர்சிக்கும் திருமணம் நடக்க காரணமாக இருந்தவர், என் சந்தோஷத்துக்கு காரணம் அவர்தான்.

நடிகை ராதிகா கூறி இருப்பதாவது:–
மஞ்சுளா அக்கா அன்பானவர். அவருடன் இருந்த இனிய நாட்களை நினைத்து பார்க்கிறேன். என் மேல் நிறைய அன்பு காட்டினார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சொல்கிறார், மஞ்சுளா எல்லோரிடமும் பாசமாக இருப்பார். நல்ல அம்மா சிறந்த தோழி.

நடிகை திரிஷா கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா எப்போதுமே என் நலன் விசாரிப்பார். என்னை வாழ்த்தவும் செய்வார். அவரை இழந்தது பெரிய வலி ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா குடும்பத்தினர் இந்த இழப்பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன். என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger