Wednesday, 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.


இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும், உடன் இருந்த மற்றொரு தோழியும் கீழே இறங்கி, அந்த ஆசாமியை தாக்கினர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், அவனை விட்டுவிடும்படி கூறியுள்ளனர். இதனால் தனக்கு ஆதரவு கிடைத்ததாக நினைத்த அந்த ஆசாமி, ஆக்ரோஷமாக ஒரு பெண்ணை தாக்கினான். டி.வி. தொகுப்பாளரும் பதிலுக்கு தாக்க, பிரச்சினை பெரிதானது.

உடனே அந்த பெண்கள் இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் காரை மறித்து தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தி, மானபங்கம் செய்த ஆசாமியை கைது செய்தனர். ஆனால், அவன் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டான்.

இதேபோல் நேற்று கொல்கத்தா மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு முதலமைச்சரின் அலுவலகம் அருகே பஸ்சில் பயணம் செய்த 2 பெண்களை ஒரு ஆசாமி மானபங்கம் செய்துள்ளான். இதனால் அழுது கொண்டே பஸ்சில் இருந்து அந்த பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். உடனே அங்கு பணியில் இருந்த போலீசார், பஸ்சை நிறுத்தி மானபங்கம் செய்த நபரை கைது செய்தனர்.

இந்த வார தொடக்கத்தில் மானபங்கம் செய்த நபரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக ரெயிலில் இருந்து விழுந்த இளம்பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger