சென்னை கோவை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் Chennai to Coimbatore AC Special train booking first start today
சென்னை, அக்.24-
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை-கோவை இடையே முற்றிலும் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரெயில்வே இதுவரை 82 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கூடுதலாக சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு முற்றிலும் ஏ.சி.(குளிர்சாதன வசதி) பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரல்-கோவை அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(வ.எண்:06009) நவம்பர் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுபாதையில், இந்த ரெயில்(06010) நவம்பர் 4-ந் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயிலில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 8 மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக இயக்கப்படும். இது கோவை செல்லும் போது வடக்கு கோவை ரெயில் நிலையத்திலும், சென்னை வரும் போது, பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?