தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை andhra heavy rain Low level of extreme low pressure
காளஹஸ்தி, அக்.23–
வங்கக் கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. அது மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டிருந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, காக்கிநாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. அனைத்து குளங்கள் மற்றும் குட்டைகளும் நிரம்பி விட்டன.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?