வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு weather center announcement continue heavy rains in north Tamil Nadu
சென்னை, அக். 23–
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
வங்ககடலில் நிலைக் கொண்டிருந்த தீவிர காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் ஆந்திரா பகுதியில் நிலைக் கொண்டிருந்த அந்த காற்றழுத்த பகுதி இன்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யும். மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?