Wednesday, 23 October 2013

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

வேலூர், அக்.24–

வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டது. வெள்ளையப்பனை கொலை செய்தது எப்படி, பிறகு எப்படி தப்பிச் சென்றனர், எங்கு தங்கி இருந்தனர் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் கொலை சம்பவம் நடந்த போது சம்பவ இடத்தில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் இருந்ததற்கான சாட்சியங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

இந்நிலையில் பிலால் மாலிக், பக்ருதீன் ஆகியோரை பல்வேறு இடங்களில் நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு நாளை வேலூர் ஜெயிலில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இதில் சாட்சிகள் குற்றசாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger