Wednesday, 23 October 2013

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

பாட்னா, அக். 23-

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சில தினங்களாக பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். வேறு வழியின்றி ராகுல் அவ்வாறு பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பா.ஜனதா நாகையாடியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் தனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டது, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து பேசியிருக்கிறார் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்களின் வாக்குகளை கவர அவர் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். நாட்டிற்கு நன்றாக தெரிந்த காந்தி குடும்பத்தின் தியாகங்களைப் பற்றி மீண்டும் புகழ் பாடுவதை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளார்.

இரண்டு முறையாக நாட்டை ஆண்டு வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல், ராகுல் அவரது குடும்பத்தை பற்றி உணர்ச்சிப் பூர்வமாக விளக்கி வருகிறார்.

இவ்வாறு ராகுல் பேசி வருவது, நவீன இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இது சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் எந்த பயனையும் தராது.

கடந்த காலத்தை பற்றிய ராகுல் காந்தியின் உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களும், சுய புராணங்களும் இன்றைய காலத்து இளைஞர்களிடம் எடுபடாது. அவர்கள் வருங்கால இந்தியாவை படைக்கும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும், பாதுகாப்பின்மையையும் அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger