Tuesday, 13 December 2011

மாத்திரைகளும் மனிதர்களும்

 
 
 
பலசரக்குகடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீபகாலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர்அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போதுஅப்படியில்லை.
தானாகவே மாத்திரைபெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்துவிட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள் மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும்உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல்சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
எனக்கு வேறொருசம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்றுமருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம்போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில்மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
வீட்டில் இருப்பவர்கள் மிகத்தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய்விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா?என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையைகொண்டுபோய் காட்டினார்கள்.
மாத்திரையைபார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல!ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்றுகாட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவதுஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
இப்படி இன்றுநிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல்உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்றுஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல்நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படிஆகிவிடுவதுண்டு.
இம்மாதிரியானநிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாகஇருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராகஇருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்குஆலோசனைதான் தீர்வு.
மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும்வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச்சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவதுபிரச்சினையை வளர்க்கும்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger