ரஜினி பிறந்த நாள் விழா இன்று பிரமாண்டமாகக் க டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் பிரமாண்ட ரஜினி பிறந்த நாள் விழாவுக்காகக் கொண்டாடப்படுவதையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் திரளான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
காலையிலிருந்தே வள்ளுவர் கோட்டம் பகுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கும் ரஜினி பேனர்கள். அந்த வழியே செல்லும் யாரும் நின்று சில நிமிடங்கள் பார்த்து விசாரித்துவிட்டுத்தான் செல்கிறார்கள்.
ஒரு முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே உரிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடக்கிறது.
எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்குகிறார்கள். நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் ரஜினி வருவார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றனர்.
இரவு 8 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என்று ரஜினியே தன் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?