Monday, 20 January 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது teacher qualifying exam verifying started working

சென்னை, ஜன. 21-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளி
கல்வித்துறை முடிவு செய்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தனியாகவும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கு தனியாகவும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைத்தாள்கள்
மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த
மாவட்டங்களில் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அதற்கான சான்றிதழை படித்த
நிறுவனத்தில் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து ஒரு பட்டதாரி கூறுகையில், நான் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். பி.எட். படிப்பை தமிழில்
படித்தேன். அதற்கு மதிப்பெண் உண்டா, சலுகை உண்டா என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமாக
தெரிவிக்கவில்லை என்று புகார் கூறினார். 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger