டெல்லி கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தீக்குளித்த பெண் உயிரிழந்தார் DU Employee harassed by principal dies of burns
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.8-
டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும், டெல்லி போலீசாரிடமும் நான் புகார் அளித்ததால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் என்னை வேலையில் இருந்தும் நீக்கி விட்டார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என போலீசாரிடம் பவித்ரா வாக்குமூலம் அளித்திருந்தார்.
டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?