இடுப்புக்கு டூப்பு போட்ட இயக்குநர் : நடிகை நஸ்ரியா கண்ணீர் – தனுஷ் ஆதரவு
by admin
TamilSpyToday, 02:39
நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தனுஷ் ஜோடியாக நடித்த நையாண்டி படம் மிக விரைவில் திரைக்குவர இருக்கிறது.
இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது , தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையில் நடிகர் தனுஷ் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார் நஷ்ரியா.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?