குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு
name avoid from chargesheet minor person chance to escape
டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?