காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல் Diana killed for carrying Dodi fayed baby in womb
Tamil NewsToday,
லண்டன், அக்.10-
இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார் விபத்தில் பலியானார்.
சார்லசுடன் வாழ்ந்த போதே இன்னொரு நபரை காதலிப்பதாக டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத் வற்புறுத்தினார்.
இந்நிலையில், பாரீஸ் நகரில் தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார்.
சரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.
இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாக ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.
அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி டயானாவை இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் தீர்த்து கட்டி விட்டது.
கர்ப்பமாக இருந்த அவரது வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டனர் எனவும் தனது புத்தகத்தில் அலன் பவர் குறிப்பிட்டுள்ளார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?