Wednesday, 9 October 2013

முடிவுக்கு வந்த தொப்புள் பிரச்சனை! வெட்டப்படும் முதலிரவுக் காட்சிகள்! Naiyandi tamil movie nasriya news

முடிவுக்கு வந்த தொப்புள் பிரச்சனை! வெட்டப்படும் முதலிரவுக் காட்சிகள்!

by admin
TamilSpyYesterday,

'தொப்புளுக்கு டூப் போட்டுட்டாங்க' என்று துவங்கிய நஸ்ரியா நஸீமின் தொப்புள் விவகாரம் பல விதத்தில் விஸ்வரூபம் எடுத்து தற்போது முடிவிற்கு வந்திருக்கிறது. 'நல்ல குடும்பப் படத்தை செக்ஸ் படம் மாதிரி பிரபலப்படுத்திட்டாங்காளே' என்று கஷ்டப்பட்ட இயக்குனர் சற்குணம், நய்யாண்டி படக்குழுவுடன் பேசி நஸ்ரியாவிற்கு திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி அவர் வேண்டாம் என்று சொல்லும் காட்சிகளை நீக்கிவிடலாம் என்று பிரச்சனையை முடிக்க ஐடியாவும் கொடுத்திருக்கிறார்.

இன்று(09.10.13) காலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் தனது வக்கீலுடன் நய்யண்டி திரைப்படத்தைப் பார்த்த நஸ்ரியாவின் தந்தை

* முதலிரவில் தனுஷ் – நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைந்திருக்கும் காட்சி

* எழுந்து அமர்ந்த பின் நஸ்ரியாவின் முதுகில் வியர்வை வருகின்ற காட்சி

* தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்கும் காட்சி

ஆகிய மூன்று காட்சிகளையும் நீக்கிவிடுமாறு கூறியிருக்கிறார். நஸ்ரியாவின் தந்தை கூறிய மூன்று காட்சிகளையும் நீக்க படக்குழு ஒப்புக்கொண்டதால் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தொப்புள் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதையடுத்து இன்று(09.10.13) மாலை 7.30-க்கு பத்திரிக்கையாளர்களை நஸ்ரியா சந்தித்து பேசுகிறார்.

பிரச்சனைக்கு மூலக்காரணமாக இருந்த தொப்புள் காட்சி படத்தில் இருந்ததா? குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் என்று சற்குணம் கூறியது மேற்கூறிய முதலிரவுக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நய்யாண்டி திரைப்படத்தைத் தானா? என்பதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு தான் தெரியவரும் என்பதால் தமிழ்த் திரையுலகம் முழுவதும் நஸ்ரியாவின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Nazriya Hot Navel Video Full Story

Show commentsOpen link

1 comments:

  1. விளபரத்திற்காக இப்பிடி செய்யுறான்னு நெனைக்கிறேன்,,,,,,,

    ReplyDelete

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger