Wednesday 9 October 2013

ராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு: மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு thevar statue insulting in rameswaram blockade protest police focus

ராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு: மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு thevar statue insulting in rameswaram blockade protest police focus

Tamil NewsToday,

ராமேசுவரம், அக். 9-

ராமேசுவரத்தில் ரெயில் நிலையம் செல்லும் வழியில் அரசு ஆஸ்பத்திரி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலை உள்ளது. நேற்று இரவு மர்ம ஆசாமிகள் யாரோ இந்த சிலையை அவமதிப்பு செய்துள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் தேவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமானோர் கூடிவிட்டனர். பின்னர் அவர்கள் தேவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனே கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மோகன்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

மறியல் செய்தவர்கள் தேவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக ராமேசுவரம் கோவில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை அவமதித்தவர்களை தேடி வருகிறார்கள். அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் மண்டபம், உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger