கோடம்பாக்கத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற போட்டி பலமாக நடந்து கொண்டிருக்க, அந்த போட்டி நடிகர்களான அஜீத்-விஜய் நடித்த படங்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.
அதோடு, எந்த விழாக்களில் அவர்களை சந்தித்தாலும் தன் அருகே உட்கார வைத்து தோள் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தும் வரும் ரஜினி, அவர்கள் நடித்த படங்களை தவறாமல் பார்த்து விட்டு, உடனே அவர்களுக்கு போன் செய்து தனது விமர்சனங்களையும் சொல்கிறார். இதனால், தங்களது படங்களை ரஜினி பார்த்து விட்டார் என்றால் அவர் தங்களது நடிப்பு பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அஜீத்-விஜய் இருவரும்.
இந்த நிலையில், தமிழ்ப்புத்தாணடு தினமான நேற்று ஒரு சேனலில் பேட்டி அளித்த ரஜினியிடம், விஜய்-அஜீத்திடம் உங்களுக்கு பிடித்த விசயம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யின் அமைதியும, அஜீத்தின் வெளிப்படையான பேச்சும் எனக்கு அவர்களிடம் அதிகம் பிடித்தவை என்று குறிப்பிட்டார்.
ரஜினி சொன்ன இந்த கருத்தினை அடுத்து விஜய்-அஜீத் வட்டாரம், ரஜினியை இன்னும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. விளைவு மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் கோச்சடையானுககு அமோக வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?