சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Chennai engineering student murder friend arrest
பெங்களூர், அக். 19–
சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர் ராஜா (26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 'சாப்ட்வேர்' என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
ராஜாவின் நண்பர் மந்திரலிங்கம் (26). இவரும் அதே நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒயிட்பீல்டு என்ற இடத்தில் வாடகை அறை எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 28–ந்தேதி ராஜா அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது நண்பர் மந்திரலிங்கம் போலீசில் புகார் செய்தார்.
முதலில் ராஜா மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனையில் ராஜா மாரடைப்பில் இறக்கவில்லை. உள்காயம் உள்ளது. தலையில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது தெரிய வந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டாக்டர்கள் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து போலீசார் ராஜாவின் நண்பர் மந்திர லிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மந்திரலிங்கம்தான் தன்னுடன் தங்கி இருந்த நண்பர் ராஜாவை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
மந்திரலிங்கத்துக்கு பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை ராஜா கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் மந்திரலிங்கம், ராஜாவை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த உண்மை 5 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்ததையடுத்து நண்பரையே கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மந்திரலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?