Tuesday, 16 July 2013

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger