சாதுவின் கனவில் '1000 டன் தங்கப்புதையல்': உ.பி. அரண்மனை வளாகத்தை தோண்டுகிறது அரசு sadhu dreams 1000 tonnes gold treasure
Tamil NewsToday,
உன்னாவ், அக். 15-
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர்.
இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.
1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இணையாக இருக்கும்.
அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?