டெல்லி தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்து கணிப்பில் தகவல் Survey opts BJP to capture more seats in Delhi polls
Tamil NewsToday,
புதுடெல்லி, அக்.16-
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக கடந்த 9ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை சுமார் 4 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் படி, 34 சதவீதம் வாக்குகளை பெற்று பா.ஜ.க. 28 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
15 சதவீதம் வாக்குகளை பெறும் ஆம் ஆத்மி கட்சி 18 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாவிட்டால் பா.ஜ.க.வுக்கு மேலும் 15 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் எனவும் கருதும் வாக்காளர்களில் 32 சதவீதம் பேர் டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
ஷீலா தீட்சித் மீண்டும் முதல் மந்திரியாக 27 சதவீதம் பேரும், பா.ஜ.க.வின் சார்பில் விஜய் கோயல் முதல் மந்திரியாவதற்கு 27 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
18-23 வயதுக்குட்பட்ட முதன்முறை வாக்காளர்கள் தற்போதைய முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு முடிவின் நிலவரங்கள் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளரை பொருத்து மாறக்கூடியவை எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?