அமெரிக்கா: காதல் தகராறில் பள்ளி தோழனை குத்திக்கொன்ற இந்திய வம்சாவழி மாணவன் கைது Indian american student arrested for killing high school friend
Tamil NewsToday,
வாஷிங்டன், அக். 16-
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவழி வாலிபரான ராகுல் குப்தா (24) ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் படித்து வந்தார்.
அவரது பிறந்த நாளையொட்டி வாஷிங்டனின் புறநகர் பகுதியான மேரிலாண்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ராகுல் குப்தா மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
தங்கள் வீட்டின் அருகே கூச்சலும், கூக்குதலும் கேட்பதாக மேரிலேண்ட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் அங்குள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கத்திக்குத்துகளுடன் கிடந்த பிணத்தையும் ஒரு வாலிபரையும் கைது செய்தனர்.
அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட மார்க் எட்வர்ட் வாக் என்பவன் தன்னுடன் விர்ஜினியாவில் உள்ள லேங்லி பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்றும் தனது காதலியும் அவனும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்தான்.
இதனால், தனது பிறந்தநாள் மதுவிருந்தின் போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் தன்னை வாக் கத்தியால் குத்த வந்ததாகவும், அந்த கத்தியை பறித்து அவனை குத்திக் கொன்றதாகவும் ராகுல் குப்தா வாக்குமூலம் அளித்தான்.
இதனையடுத்து, போலீசார் அவனை கைது செய்தனர்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?