சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவிற்கு இன்று ஏசி சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது Chennai central to Orissa AC special train today start
சென்னை, அக். 15–
ஒடிசா மாநிலத்தை 'பைலின்' புயல் தாக்கியதை அடுத்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு செல்லக்கூடிய 4 ரெயில்கள் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டது.
சென்ட்ரலில் இருந்து கோரமண்டலுக்கு இன்று காலை ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தனர்.
அங்கு நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால் படிப்படியாக ரெயில் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
ஒடிசா மாநிலத்திற்கு செல்லக்கூடிய மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருவதை அறிந்து தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் ஒன்று அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வருக்கு இந்த ரெயில் (எண். 02829) இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது. சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
இந்த ரெயில் நாளை இரவு 7 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகளாகும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்–10, 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்–4 இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் கூடூர், ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பலசா, பெர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?