சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது அதன் பெயர்- தமிழ் இல்லை, இந்தி—தோஸ்த்.ரகுவரன்,சரத்குமார் நடித்தது.அதில் இன்சூரன்ஸ் பணத்துக்காக ரகுவரன் ,சரத்குமாரால் கொல்லப்பட்டது போல் ஒரு நாடகம் போட சரத்குமாருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. விடுதலையாகி வரும் சரத்,ரகுவரனைப் பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்து கொண்டு கடைசியில் தண்டனை கொடுத்த நீதிபதி முன்பே ரகுவரனைக் கொன்று விடுகிறார்.கேள்வி-ஒரே குற்றத்துக்கு இரண்டு முறை தண்டிக்க முடியுமா?
ஓரளவுக்கு இது போல் ஒரு நிகழ்ச்சி உ.பி யில் நடந்திருக்கிறது.ஒருவரைக் கொன்றதாக மூன்று பேருக்கு செஷன்ஸ் நீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்க மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதி மன்றம், தண்டனையை உறுதி செய்தது. அவர்கள் தண்டனை பத்தாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,கொலை செய்யப் பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிரோடு திரும்பி வந்து, தான் இத்தனை ஆண்டுகள் இமாசலப் பிரதேசத்தில் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லியிருக்கிறார்.இப்போது அவர்கள் ஜாமீனில்(!) விடப்பட்டிருக்கின்றனர்.மூவரும் உச்ச நீதி மன்றத்தில் தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கம்பிகளுக்குப் பின் கழித்து விட்ட பத்தாண்டுகளை யாராலாவது திருப்பித்தர இயலுமா? ஆயுள் தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை கொடுத்திருந்தால்? போன உயிரைத் திருப்பி வரவழைக்க முடியுமா?மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு இந்த ஒரு காரணம் போதாதா?
சொல்லுங்கள்!
http://cmk-mobilesms.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?