கொள்ளுப்பிட்டியில் உள்ள தொடர்மாடி வணிக வளாகத்தில் 6 வது மாடியில் இரகசியமாக விபச்சார விடுதி நடத்திவந்த ஜின்னா மேடம் கைதானது யாவரும் அறிந்ததே. உள்ளூர் மற்றும் வெளியூர் பெண்களை வைத்து உயர்ந்த மனிதர்கள் மட்டும் செல்லக்கூடிய வகையில் அந்த விபச்சார விடுதி அமைந்திருந்தது.
கொழும்பில் உள்ள பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் என அனைவரும் அங்கே செல்வது வழக்கம். கோத்தபாயவின் சிறப்பு உத்தரவின் பேரில் இவ்விடுதி பொலிசாரல் முற்றுகையிடப்பட்டது. காரணம் கோத்தபாயவுக்கே வெளிச்சம். அப்போது 14 பெண்களோடு சேர்ந்து கைதான ஜின்னா மேடத்தை இதுவரை பொலிசார் நன்றாகவே நடத்தி வருகின்றனர். இவரை விடுதலை செய்யச் சொல்லி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் இருந்து பல அழுத்தங்கள் வந்தவண்ணம் உள்ளதாம். ஆனால் இப்போது கதை வேறு விதமாகப் போகிறது.
அதாவது விபச்சார விடுதி வழக்கில் சிக்கிய ஜின்னா மேடத்தை அவ்வழக்கில் போடாது அவர் கைதாகும் போது சிறுத்தையின் தோலை வைத்திருந்தார் என்று பொலிசார் கூறியுள்ளனர். ஆஹா இது என்ன புதுக்கதை என்று கேட்கிறீர்களா? ஆம் இப்ப பொலிசார் கூறுகிறார்கள் அவர் அனுமதியின்றி சிறுத்தையின் தோலை வைத்திருந்தார் என்று. அதற்கு மிக மிக குறைந்த பட்ச தண்டனை தான். ஆனால் விபச்சார விடுதி ஒன்றை நடத்தினார் என்று சொன்னால் அதற்கான தண்டனை என்னவென்று அனைவருக்கும் தெரியுமல்லவா.
தற்போது இந்த வழக்கு திசைமாறிப் போகிறது. ஜின்னா மேடத்திடம் கோத்தபாயவும் விழுந்துவிட்டார் போலும்.
அதிர்வு
http://kannottam.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?