ஒரு சிறு விளக்கம். "துணை" முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். இக் கதையில் , திருப்பங்களோ,'அது' போன்ற சமாசாரங்களோ கிடையாது.நான் தொடரும் போட்ட காரணம் அதிகமாகத் தட்ட முடியவில்லை என்பதுதான்.இது வாழ்க்கையின் அபத்தங்களைக் கூறும் ஒரு கதை .அவ்வளவே!எனவே எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்!
காலை முதல் கணினி தகராறு!திரையில் 'no signal input' என்றே செய்தி வந்து கொண்டிருந்தது. பொறியாளரிடம் கூறினேன். மழைக்காலம் எனவே ram இல் ஈரம் படிந்திருக்கும்.துடைத்துப் போட்டால் சரியாகி விடலாம் என்று கூறி வருவதாகச் சொன்னார். நானே எடுத்துத் துணியால் துடைத்துப் போட்டேன். சரியாகவில்லை. பொறியாளர் வந்து ram ஐ எடுத்து ரப்பரால் துடைத்து விட்டுப் போட்டார் .சரியாகி விட்டது!அவர் சரி செய்து விட்டுப் போகும்போது மணி மாலை 3.45. மணி 4 முதல் 5 வரை மின்சாரம் துண்டிப்பு.5.30க்கு ஒரு நிச்சயதார்த்தத்துக்குப் புறப்பட்டேன்.திரும்பி வீடு வந்து சேரும்போது மணி இரவு 8.இதற்கு மேல் யோசித்து,எண்ணங்களைச் சொற்களாகித் தட்டிப் பதிவேற்றுவதென்பது என்னால் இயலாத செயல். எனவே துணை –நிறைவுப்பகுதி நாளைதான்.
முடிக்கும் முன் சில சிந்தனைகள்---
1)பணம் மகிழ்ச்சியைத்தராது;ஆனால் ஒரு சைக்கிளின் மீது அமர்ந்து அழுவதை விட,ஒரு பென்ஸ் காரினுள் அமர்ந்து அழுவது வசதியாகத்தான் இருக்கும் !
2)உன் எதிரியை மன்னித்துவிடு:ஆனால் அந்த அயோக்யனின் பெயரை மறக்காதே!
3)கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்;அவன் உன்னை நிச்சயம் நினைப்பான்,அவன் மீண்டும் கஷ்டப்படும்போது!
4)பலர் இன்னும் உயிருடன் இருக்கக்காரணம் –அவர்களைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும்!
5)மது எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடுவதில்லை;--பாலும்தான்!
http://cmk-mobilesms.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?