Monday, 7 November 2011

அம்மாவுக்கு ஒரு ���ோவில்!



சில நாட்களுக்கு முன் மகனால் சரியாக நடத்தப்படாத ஒரு தாய் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.ஆனால் இன்று,  இறந்து விட்ட தன் தாய்க்காக ஒரு கோவில் கட்டிய ஒரு அன்பு மகனின் கதை--கதையல்ல நிஜம்.


2007ஆம் ஆண்டு  64 வயதில் காலமான தனது தாயின் மீது  அபரிமித அன்பு கொண்ட ,துறையூரைச் சேர்ந்த சுரேஷ் குமார்,தன் தாயின் நினைவாக ஐந்து கோடிச் செலவில்  ஒரு நினைவாலயம் கட்டியிருக்கிறார். 30000 சதுர அடியில் கட்டப்பட்ட  அந்த நினைவாலயத்தில், அவரது தாயின் 64 படங்கள் உள்ளன.அந்தப் படங்கள் உடைந்த வளையல் களாலும், தீக்குச்சிகளாலும்,மணிகளாலும் உருவாக்கப்பட்டவை.அவரின் அஸ்தி எல்லா நதிகளிலும் தூவப்பட்ட பின்,அந்த ஆலயத்தில் உள்ள அத்தாயின் வெண்கலச்சிலையின் கீழ் 64 அடி ஆழத்தில் புதைக்கப் பட்டதாம்.64 அடி உயர ஒரு ஸ்தூபி கட்டிடத்தின் முன் உள்ளது.அந்த இடத்தின் மொத்த அளவு 2.5 ஏக்கர்.


தனது சொந்த சேமிப்பில் அந்தக் கோவில் கட்டப்பட்டதாகவும், தாய் மீது உள்ள அவரது அன்பை பணத்தால் அளவிட முடியாது என்றும் சுரேஷ் குமார் சொல்கிறார்.


ஒரு இடுகாட்டின் அருகில் கட்டப்பட்ட அந்த நினைவாலயத்தில் இடு காட்டுக்கு, வரும் மக்கள் நீராடுவதற்காக ஒரு 7 நட்சத்திரக் குளியலறை  இருக்கிறதாம்.(அப்படி என்றால் என்ன?)


அது தவிர ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்த ஒரு பெரிய கூடமும் உள்ளதாம்-இலவசமாகக் கிடைக்கும்.


உங்களில் பலர் கேட்கலாம்"5 கோடியைச் செலவழித்து,ஒரு நினைவாலயம் கட்டுவதற்குப் பதில்,தாயின் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம்,ஏழை மாணவர்கள் கல்விக்கும்,ஆதரவற்ற  முதியோரின் வாழ்வுக்கும், உதவலாமே,அது மேலும் சிறப்பாக இருக்குமே "என்று.


நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கிறீர்கள்.அவரின்  தாயன்பு அவரை உணர்ச்சி பூர்வமாகச் சிந்திக்க வைத்து விட்டது.


அவரது அன்புக்குத் தலை வணங்குவோம்!


இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற அத்தாய்


எந்நோற்றாள் கொல்?

(செய்தி:இந்தியாவின் நேரங்கள்-2-11-2011)



http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger