
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கோவையில் ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலகம் முழுவதும் 139 நாடுகளில் மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மரண தண்டனையை நீக்குவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதால், கச்சத்தீவு உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின்நிலைய விஷயத்தில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ராஜா கூறினார்.
http://kannottam.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?