பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட போது சீட்டு விளையாடிய ஒபாமா Bin Laden killed in Pakistan during a card game Obama
அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது அமெரிக்க ராணுவத்தின் ‘நேவிசீல்’ என்ற அதிரடிபடையால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2001–ம் ஆண்டு மே 2–ந் தேதி நடந்தது.தாக்குதல் நடத்தி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அக்காட்சியை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறையில் இருந்து அதிபர் ஒபாமா
வீடியோ கான்பரன்ஸ்சிங் மூலம் பார்த்ததாக முன்பு தகவல் வெளியானது.
ஆனால் அப்போது, அவர் மேலும் 2 பேருடன் சேர்ந்து ஜாலியாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஒபாமாவின் முன்னாள் பாதுகாவலர் மேன்றக்கி லவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, பாகிஸ்தான் அபோதாபாத்தில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது கண்காணிப்பு அறையின் மேல் மாடியில் சீட்டு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, நான் ஒபாமாவுடன் தான் இருந்தேன். எனவே, பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. பின்லேடனுடன் அமெரிக்க ராணுவம் சுமார் 150 நிமிடங்கள் அதாவது 1½ மணி நேரம் துப்பாக்கி சண்டை நடத்தியது என்றும் அவர் கூறினார். இந்த தகவலை அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?