Sunday, 3 November 2013

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகள் college girls news

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகளால் அதிர்ந்த மக்கள்..!! – படம் இணைப்பு

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு மிகுந்த மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இவரைச் சுற்றி 3 மாணவிகள், 5 மாணவர்கள் என அனைவருமே மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களை தள்ளாடியதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டத்தின் மத்தியில் கால்கள் தரையில் கூட நிற்க முடியாத நிலையில், பெண்கள் நான்கு பேரும் உளறிக் கொண்டே சென்றுள்ளனர். பின்பு தம்மை ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதை அறிந்து உடனடியாக அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் அனைவரும் தங்கள் விடுதிக்கு சென்று விட்டனர். இவ்வாறான பழக்கங்கள் பெங்களூர் போன்ற நகரங்களில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் திருச்சியில் இது அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்.  இவர்கள் கிரிமினல் கண்களில் சிக்கியிருந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கும் போதே, டெல்லி சம்பவம் தான் கண் முன் நிழலாடுகிறது.

இதுகுறித்து பார் ஊழியர் ஒருவர் கூறுகையில், பசங்களுடன் கல்லூரி மாணவிகள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். பல நேரங்களில் போதையின் உச்சத்திற்கு சென்று அவர்கள் ரகளை செய்வதுமுண்டு.

அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பது பெரும்பாடாக இருக்கும். பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக டிப்ஸ் தருவார்கள் என்றும் இவர்கள் எங்கள் வாடிக்கையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger