Thursday, 20 June 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யில் மீண்டும் சூர்யா ,. போட்டியாளராக again surya in nvok

விஜய் டிவியில் பிரகாஷ்ராஜ் நடத்தி வரும்
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’
நிகழ்ச்சி அனைவரது ஆதரவுடன்
வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில்
அடிக்கடி சினிமா பிரபலங்களும்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும்
கலகலப்பாக்கி வருகின்றனர்.
இப்போது இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்
நடத்திய சூர்யாவே , ஒரு போட்டியாளராக
கலந்து கொண்டு பிரகாஷ்ராஜின்
கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சி வரும் வெள்ளியன்று ஜுன் 21ம்
தேதி இரவு 8 மணிக்கும், ஜுன் 24ம்
தேதி இரவு 8 மணிக்கும் விஜய் டிவியில்
ஒளிபரப்பாகவிருக்கிறது.



கடந்த வாரம்
ஹன்சிகா மோத்வானி கலந்து கொண்ட
நிகழ்ச்சி பல இளம் நேயர்களை வெகுவாக
கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக தான்
நடத்தி வரும் ‘அகரம்’ பவுன்டேஷனுக்காக
சூர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
‘சிங்கம்’ படத்தில் சூர்யாவும், பிரகாஷ்ராஜும்
இன்ஸ்பெக்டர், வில்லனாக நேருக்கு நேர்
மோதிக் கொண்டு அந்த படத்தை மாபெரும்
வெற்றி பெறச் செய்தனர். ஒருவருக்கொருவர்
அவர்களது அனுபவங்களை பகிர்ந்து
கொண்டுள்ளனர். திறமையான மறைந்த நடிகர்
ரகுவரன் பற்றி மறக்க முடியாத
சம்பங்களை சூர்யா நினைவு கூர்ந்துள்ளாராம்.
அதிகமாக வெளிப்படையாகப் பேசாத சூர்யா,
இந் நிகழ்ச்சியில் பல விஷயங்களை மனம்
விட்டு பேசியுள்ளது அனைவரையும்
கவர்ந்திழுப்பது உறுதி.
இந்த நிகழ்ச்சியில் இவர்களது வேறு விதமான
மோதல், சுவாரசியமாக அமைந்துள்ளது.
‘போன் எ பிரண்ட்’ பகுதியில்
ஒரு கேள்விக்கு பதில் அளிக்க சூர்யா,
அவரது தம்பியும் ஹீரோவுமான கார்த்தியிடம்
அந்த கேள்விக்கான
பதிலை கேட்பது அவர்களின்
இரு ரசிகர்களுக்குமே கொண்டாட்டமாக
இருக்குமாம்.
ஒரு கேள்விக்கு வித்தியாசமாக சூர்யா,
பிரகாஷ்ராஜை ‘ஹாட் சீட்டில்’ உட்கார
வைத்து அவரை பதிலளிக்கச்
சொல்லியிருக்கிறாராம்.
இப்படிப்பட்ட பல சுவாரசியங்களை வரும்
வெள்ளியன்று காணத் தவறாதீர்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger