லத்திகா என்ற படத்தில் நடித்திருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்காக தேடிச்சென்று புக் பண்ணினார் சந்தானம். அதோடு, அப்படத்தில் தனக்கு இணையான ரோலை கொடுத்து பவர்ஸ்டாரையும் ஒரு நடிகராக்கி விட்டார். விளைவு, அதன்பிறகு சந்தானத்தின் மார்க்கெட்டையே காலி பண்ணும் அளவுக்கு விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றார் பவர் ஸ்டார். இதனால் அதன்பிறகு அவருடன் நடித்தால் தனக்கு ஆபத்து என்று அவரை தனது படங்களில் நடிக்க வைப்பதை தவிர்த்து வந்தார் சந்தானம்.
இதற்கிடையே கோர்ட்டு, கேசு என்று அலைந்து கொண்டிருந்த பவர்ஸ்டார் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருவதால், தற்போது தான் ஹீரோவாகியுள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டாரை காமெடியனாக நடிக்க வைத்துள்ளார். கதைப்படி தான் ஹீரோ என்பதால் அதிகமான காமெடி காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், காமெடி ஏரியாவுக்குள் பவரை இறக்கி விட்டுள்ளாராம் சந்தானம்.
ஆனால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழாவுக்கு 2 லாரிகளில் ஆட்களை கொண்டு இறக்கி விட்டு அரங்கத்தை திணற வைத்து விட்ட பவர்ஸ்டாரை, இந்த படத்துக்கு புக் பண்ணும்போதே, படம் ரிலீசாகும் வரை இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி மூச் விடக்கூடாது என்று ஆப் பண்ணி வைத்து விட்டாராம் சந்தானம். அதனால்தான் இப்போதுவரை தான் நடித்திருக்கும் விசயத்தை வெளியில் சொல்லி பில்டப் கொடுக்க முடியாமல் பல்லை கடித்துக்கெணர்டு இருக்கிறாராம் பவர்.
மேலும், இதே படத்தில் தேவயானியின் கணவரான சோலார் ஸ்டார் இராஜகுமாரனையும் காமெடி களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் சந்தானம். ஆக, பவர்ஸ்டார், சோலார் ஸ்டார் என்ற இரண்டு காமெடி புயல்கள் சந்தானத்துக்கு பக்கபலமாக நடித்திருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?