
தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கு, இந்தி என பிஸியாகி விட்ட அவர் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். முக்கோண ஆக்சன் படத்தில் ஒரு சிட்டி கேர்ளாக நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, ஏழாம் அறிவு படத்தைப்போலவே கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்.
அதன்காரணமாகவே இந்த படத்தை அவர் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சின்சியராக இருந்தாராம் ஸ்ருதி. ஓய்வு நேரங்களில் செல்போனில் கேம் ஆடிக்கொண்டிருந்தாலும், ஷாட் ரெடி என்று உதவியாளர் வந்து சொன்னதும் உடனே, கேரவனை விட்டு வெளியே வந்து கேமரா முன்பு ஆஜராகி விடுவாராம். அதோடு, எத்தனை பெரிய ஷாட்டாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓ.கே செய்து கொடுத்தாராம் ஸ்ருதிஹாசன். இதனால், டைரக்டர் ஹரி திட்டமிட்டபடியே விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்ததாம். அந்த வகையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட பூஜை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.
இதையடுத்து, வழக்கம்போல் தனது பட கதாநாயகிகளின் திறமையை புகழ்ந்து தள்ளிக்கொண்டு திரியும் விஷால், தனது அபிமானிகளிடம், ஸ்ருதி இவ்வளவு கற்பூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் டான் டான் என்று முடித்துக்கொடுக்கிறார். அவரது நடிப்பைப்பார்த்து ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம், அவரைப்போலவே நாமும் சொதப்பாமல் ஓ.கே பண்ணி கொடுக்க வேண்டுமே என்ற பயமும் மனதளவில் ஏற்பட்டது என்று கூறும் விஷால், ஸ்ருதிஹாசனின் படக்கூலி சற்று ஜாஸ்தியாக இருந்தாலும், அதற்கு அவர் ஒர்த்தபுளான ஆர்ட்டிஸ்டுதான் என்கிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?