சண்டிகர், அக். 19-
அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. 49 தொகுதிகளையும், இந்திய தேசிய லோக் தளம் 20 தொகுதிகளையும் கைப்பற்றியது. அங்குள்ள குர்கோன் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் உமேஷ் அகர்வால் மாநிலத்திலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார்.
இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த இந்திய தேசிய லோக் தள வேட்பாளரை 84095 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதே போல் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மனோகர் லால் கட்டார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை 63773 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பல்லாப்கர்க் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் மூல் சந்த் சர்மா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 53098 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?