சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததால் ஜெயலலிதா சென்னை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (அக்டோபர் 18) வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீங்கள் போயஸ் கார்டன் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் உடல் நலமுடனும், மனஅமைதியுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் ரஜினி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?