நாக்பூர், அக். 19-
விவசாய பூமியான விதர்பா பகுதி பருத்தி விளைச்சலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். வறட்சியால் அங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், தற்போது மக்கள் மோடியை நம்பி பா.ஜ.க.விற்கு தங்கள் வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்.
அங்கு மொத்தமுள்ள 62 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான துணை சபாநாயகர் வசந்த் புர்கே, நிதின் ராத், ராஜேந்திர ஷெகாவத், அனீஸ் அகமது, சதீஸ் சதுர்வேதி மற்றும் ராகுல் தாக்ரே ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதே சமயம் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களான தேவேந்திர பட்னவிஸ், சுதீர் முங்கட்டிவர் மற்றும் செயின்சுக் சான்செட்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?