வேலூர், அக்.19–
வேலூர் சைதாப்பேட்டை ஆஸ்பிட்டல் வெங்கடாஜல முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). நகை செய்யும் தொழிலாளி. இவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெயக்குமார் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து டிஎஸ்பி பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ரீனா ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?