மும்பை, அக். 19–
மராட்டிய முன்னாள் முதல்–மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான நாராயண ரானே குடால் தொகுதியில் போட்டியிட்டார். இதில் நாராயண ரானே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். சிவசேனா வேட்பாளர் வைபவ் நாயக் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரானேயை தோற்கடித்தார்.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் மந்திரிகள் பின்தங்கி உள்ளனர். முன்னாள் உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டில் பின்தங்கி உள்ளார்.
இதே போல அரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்–மந்திரி ஒம்பிரகாஷ் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலா பின்தங்கி இருக்கிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?