ஊட்டி, அக். 19–
நீலகிரி மாவட்ட தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கரால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் 2 நகல்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்குதல், ஏற்கனவே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள் விவரத்தில் தவறுகள் இருப்பின் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு 15.10.2014 முதல் 10.11.2014 தேதி வரை தொடர்புடைய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வரும் 30.10.2014 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் சமயம் வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்கள் வாசிக்கப்படும். அத்துடன் வரும் 26–ந் தேதி மற்றும் 2–ந் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6–ல் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 2015–ம் வருடம் ஜனவரி 1–ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும், அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பெயர் விடுபட்டவர்கள், வேறு சட்டசபை தொகுதிக்கு மாறியவர்களும் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 25 வயது உடையவர்கள், விண்ணப்பத்துடன், பிறந்த தேதிக்கான சான்று இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருப்பிடச் சான்றுடன், இதற்கு முன் குடியிருந்த முகவரி, ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் செய்ய படிவம் 8, முகவரி மாற்ற படிவம் 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் வாக்காளர்கள் செல்போன் எண், ஈ–மெயில் உள்ளிட்ட வற்றை குறிப்பிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஷ்ஷ்ஷ்.மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தற்போது செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப் பங்களும் பரிசீலிக்கப்பட்டு 2015 ஜனவரி 5–ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மேற்கண்டவாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?