ஜெருசலேம், அக். 19–
ஈராக் முன்னாள் அதிபராகவும் சர்வாதிகாரியாகவும் இருந்தவர் சதாம்உசேன். இவர் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவர் அதிபராக இருந்தபோது கடந்த 1981–ம் ஆண்டில் ஈராக் அணு உலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தது.
அதற்கு பழி வாங்க சதாம் உசேன் திட்டமிட்டார். இச்சம்பவத்தின் போது இஸ்ரேல் பிரதமராக மெனாசெம் பிகின் பதவி வகித்தார்.
இவரை கடத்தி பாக்தாத் கொண்டு வர சதாம்உசேன் திட்டமிட்டார். மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வற்புறுத்தலை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்த தகவலை சதாம் உசேனின் வக்கீல் பாடீ ஆரிப்தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அப்புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?