டமாஸ்கஸ், அக். 19–
ஈராக் மற்றும் சிரியாவில் 'ஐ.எஸ்.ஐ.எஸ்' தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அங்கு தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கில் தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
தற்போது சிரியாவில் வேறு விதமாக கொலை செய்கின்றனர். வடக்கு சிரியாவில் அலெப்போ மாகாணத்தில் அல்–பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தை வீடியோ எடுத்தவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது பிணத்தை சிலுவையில் கட்டி தொங்க விட்டனர்.
மேலும் அவர் செய்த குற்றங்களை எழுதி பிணத்தில் ஒட்டியிருந்தனர். அதில் கொல்லப்பட்டவர் பெயர் அப்துல்லா அல்–புஷ். செய்த குற்றம்–500 துருக்கி லிரா அதாவது 15 ஆயிரம் ரூபாய்க்காக வீடியோ படம் எடுத்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
'ஐ.எஸ்.' அமைப்பை உளவு பார்ப்பவர்கள் மற்றும் தங்களது மதத்தில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு இது போன்ற தண்டனையை தீவிரவாதிகள் வழங்குகின்றனர். கொல்லப்பட்டவர்களை 3 நாட்கள் சிலுவையில் கட்டி தொங்க விடுகின்றனர்.
இதற்கிடையே கொபானே நகரில் குர்தீஷ் படையினரிடம் சிக்கி கைதிகளான 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?