புதுடெல்லி, அக். 19-
அருணாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் வழக்கம் போல் பா.ஜ.க.வும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. அருணாச்சலில் உள்ள கனுபாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேப்ரியேல் டென்வாங் வாங்சு 885 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்தார்.
குஜராத்திலுள்ள ராஜ்கோட் மேற்கு தொகுதியில் பா.ஜ.க.வின் விஜய்குமார் ராம்னிக்லால் ருபானி 23740 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
அதே போல் உ.பி.யிலுள்ள கைரானா தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் நஹித் ஹசன் 1009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாளை மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநில சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?