சண்டிகார், அக். 19–
அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
ஆனால் அம்மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா வெற்றி பெற்றுள்ளார். ரோத்தக் மாவட்டம் கார்ஹி சம்ப்லா கிலாய் தொகுதியில் போட்டியிட்ட அவர் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளரை தோற்கடித்தார்.
அரியானா மாநில பா.ஜனதா சட்டமன்ற தலைவர் அனில் விஜ் அம்பாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சிங்கை 15,462 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அம்மாநில மந்திரி கீதா பகுல் (காங்கிரஸ்) ஜாஜர் தொகுதியில் 26,584 ஓட்டுகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளர் சாதுராமை தோற்கடித்தார்.
மராட்டிய மாநில முதல்-மந்திரி பிரதிவிராஜ் சவுகான் கராட் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். முதலில் பின் தங்கி இருந்த அவர் பின்னர் 16,418 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளரை தோற்கடித்தார்.
மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் தேவேந்திரா பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் 30,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேசிய வாத காங்கிரஸ் தலைவரும், மராட்டிய முன்னாள் துணை முதல்– மந்திரியுமான அஜீத் பவார் பாரமதி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 86,850 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?