திட்டக்குடி, அக்.19–
கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது 2½வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற உமாநாத் மற்றும் காரில் பயணம் செய்த தேவஸ்ரீ, ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?