இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-
மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். அரியான-மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்.
மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு தொடர்ந்து கடினமாக முயற்சி செய்வோம், என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?