கராச்சி, அக். 19–
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகன் பிலாவல் பூட்டோ. பெனாசிர் கொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரானார்.
பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி 25 வயது நிரம்பியவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும். எனவே அவர் அதிகார பூர்வமாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.
இதற்கிடையே தனது 26–வது வயது தொடங்கியதும் தீவிர அரசியலில் குதித்தார். அதை தொடர்ந்து முதன் முறையாக கராச்சியில் தனது தலைமையில் பொதுக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.
அதில் 50 ஆயிரம் பொது மக்கள் திரண்டு பிலாவலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவரது பொதுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து கராச்சி நகருக்கு சிந்து மாகாண அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது.
பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க குறிப்பிட்ட நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் பிலாவல் வந்து சேர்ந்தார். அவரது தந்தை ஆசிப்அலி சர்தாரியும் சிறிது நேரத்தில் வந்தார்.
தனது அரசியல் பயணம் குறித்து டுவிட்டரில் பிலாவல் பூட்டோ குறிப்பிட்டுள்ளார். அதில், ''எனது மக்களுக்காகவும், கட்சி தியாகிகளுக்காகவும் எனது தாயாருக்காகவும் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?