* தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே....?
கோர்ட்டுல ஜட்ஜை பார்த்ததும் "எஜமான்"ன்னு கூப்புடுறாரே.....!
-----------------------------------------------------------------------------------
* இந்த வீரனுக்கு மனதில் மன்னர் என்ற நினைப்பு போலும்........
ஏன் மன்னா..................என்ன ஆச்சு...?
"போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் கோயில்ல தரும் புளியோதரையும், பொங்கலும் சூடா இருந்தாலும் அதையும் "பிரசாதம்"னுதான் சொல்லணும், "ஃபிரஷ் சாதம்"ன்னு சொல்ல முடியாது...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் பசு மாட்டுக்கு "ரோஜாப்பூவா" சாப்பிடப் போட்டாலும், அது "மில்க்"தான் தருமே தவிற "ரோஸ்மில்க்" எல்லாம் தராது...
* எதுக்காக மகளிர் அணி தலைவியை மாத்தணும்னு தலைவர் அடம்பிடிக்குறாரு...?
பார்க்க அவர் மனைவி மாதிரியே இருக்காங்களாம்....!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தூக்கத்துல நடக்குற அந்த பேஷன்ட், இப்போ அழுதுகிட்டே நடக்குறாரே........ஏன் ?
நர்சுக்கு கல்யாணமான சேதி தெரிஞ்சதும், "துக்கத்துல" நடக்குறதாலையா இருக்கும் டாக்டர்...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* பயபக்தியோடு
சாமி கும்பிட்டான்
சிரமம் வைக்காமல்
உண்டியல் திறக்க
வேண்டுமென்று..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?
நம்ம தலைவருடைய உருவபொம்மையை எரிக்காமலேயே அவரை அவமானபடுத்திட்டான்களா....எப்பிடி...?
திருஷ்டி பொம்மையா வச்சிட்டாங்களே....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருத்தன் என்னதான் திறமையான குக்கா இருந்தாலும், அவர் "கோதுமை ரவை"யில உப்புமா செய்யலாம், "அரிசி ரவை"யில உப்புமா செய்யலாம், ஆனா " அமைச்ச ரவை"யில உப்புமா செய்ய முடியுமா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?
மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் ஆறடி கூந்தல் அழகின்னாலும், கூந்தல்ல "ஜாதிமல்லி"யை வச்சுக்கலாம், "அடுக்குமல்லி"யை வச்சுக்கலாம், "கொத்தமல்லி"யை வச்சிக்க முடியுமா...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
* தலைவர் எப்போதும் மேடையில் மகளிர் அணி தலைவியோட இடுப்பை பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டே இருப்பாரு, இப்ப ஏன் டீசண்டா வேற பக்கம் திரும்பி உக்காந்துட்டு இருக்கார்..?
அவரோட நடவடிக்கைகளை சி பி ஐ கண்கானிக்குதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போல...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
* மகளிரணித் தலைவியை தலைவர் தூக்கிப் பழகறாரே.....ஏன்..?
சேர்ந்து கட்சி தாவ டிரை பண்ணுறார்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஆபீசுக்கு "லஞ்ச் பேக்" கொண்டு போகலாம், "லஞ்ச பேக்" கொண்டு போக முடியுமா...?
நன்றி : குங்குமம்.
http://kannottam.blogspot.com/
http://kannottam.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?