இயக்குனரின் மதராசபட்டினம் படத்தால் கவரப்பட்டு காண சென்றேன் தெய்வ திருமகள். மதராசப்பட்டினம், டைட்டானிக் படத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுத்திருந்தாலும், அதன் நேர்த்தியான திரைக்கதை மற்றும் எமி ஜாக்சனின் அழகு மற்றும் நடிப்பு அதை கண்டுகொள்ளாமல் பார்க்க செய்தது. விக்ரமும் அப்படியே நம்பி அவர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பார்.
ஆனால் தெய்வ திருமகள் "ஐ ஆம் சாம்" படத்தை முக்கால்வாசி அப்படியே உருவி எடுக்கப் பட்டிருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்தாலே புரியலாம். இப்படத்தின் திரைக்கதையை பார்த்தால், மதராசப்பட்டினம் படத்தின் திரைக்கதையை இவர் எழுதியிருப்பாரா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. நல்லவேளை நான் இன்னும் ஒரிஜினல் படம் பார்க்க வில்லை. இல்லையென்றால் என்னால் இந்த படத்தை கடைசி வரை பார்த்திருக்க முடியாது. விக்ரமின் ஹேர் ஸ்டைல் கூட ஒரிஜினல் படத்தின் ஹீரோவை போல உள்ளது.
தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு சொந்த சரக்கு தீர்ந்து விட்டதை சமீப காலமாய் வரிசையாய் வரும் ஆங்கில படத்தின் காப்பி கொட்டைகளே உதாரணம். அந்த வகையில் வேங்கையை காப்பி அடிக்காமல் சொந்தமாய் எடுத்திருக்கும் ஹரி வைரமாய் மிளிர்கிறார்.
எனக்கு விமர்சனம் எழுதும் போது அவ்வளவாய் கதை சொல்ல பிடிக்காது. இந்த படத்திற்கு அதை சொல்வதும் தேவை இல்லாதது.
விக்ரமின் நடிப்பு கதைக்கு ஏற்றார் போல நடிக்காமல், அவார்டுக்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். அடுத்த உலக நாயகன் ;-) கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு ஒரு அவார்ட் கொடுத்திருங்கப்பா! பாவம்.
அந்த குட்டி பெண்ணின் அழகையும், சந்தானத்தின் காமெடியையுமே அதிகமாய் நம்பியிருக்கிறார் இயக்குனர். இது சத்தியமாய் குழந்தைகளுக்கான படமில்லை.
தெய்வ திருமகனா? தெய்வ திருமகளா? என்று இந்த படத்தின் தலைப்பை மையப் படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு தெரியவில்லை பிரச்சினை தலைப்பில் இல்லை என்று.
இதில் இந்த விசிலடிச்சான் பன்றிகளின் அலம்பல் வேறு. அடுத்த முறை போகும் போது அவர்கள் வாயில் கட்டையை எடுத்து கொண்டு போய் சொருகி விட வேண்டும்.
தொப்புள் காட்சி, ஆபாசம் இல்லாமல் எடுப்பது குடும்ப படம் என்றால், குடும்ப படம் என்ற ஒரே காரணத்துக்காக படத்திற்கு போக விருப்பப் பட்டால் போகலாம்.
படத்திற்கு போகும் போது மறக்காமல் ஒரு கர்ச்சீப் எடுத்துட்டு போங்க. கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரே உணர்ச்சி திருவிழா நடக்கிறது. இயக்குனருக்கு சன் டீவில ஒரு ப்ரைம் ஸ்லாட் ஒதுக்கி கொடுத்தால் சிறப்பாய் ஒரு சீரியல் எடுக்கக் கூடிய ஒளிவட்டம் தெரிகிறது.
நமீதா டச்: தெய்வ திருமகள், பரிதாபமான கோலம்.
http://tollywwod.blogspot.com/
http://tollywwod.blogspot.com/
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?