ஒரு வழியாகநேற்று அதிகாலை அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் இசை வெளீயிட்டு விழா ரேடியோ மிர்ச்சியில் வைத்து நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,வைபவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று இசை வெளீயிடு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்காக பிரத்யேக டிரெய்லரும் வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்த்த அஜீத் ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் இயக்குனர் வெங்கட்பிரபுக்கு அவரது டிவிட்டர் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " டிரெய்லரில் அஜீத்தின் கடைசி வசனம் வரவேற்பை பெறும் " என்று கூறி இருந்தார். அது போலவே " எவ்வளவு நாள் தான் நான் நல்லவனாவே நடிக்கிறது? " என்று அஜீத் பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
'ஆயுத எழுத்து', 'மன்மதன் அம்பு' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார் த்ரிஷா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?