படத்தை பற்றி நாலு வரி பேசினால் கூட அதை சுட்டு வேறு படத்தில் வைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் எந்த கேள்வி கேட்டாலும், அதை எப்படி இப்பவே சொல்றது, படத்தில பாருங்க என்று பதில் சொல்வதுதான் இன்றைய இயக்குனர்களின் வழக்கம்.
ஆனால் தான் இயக்கப் போகும் கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் படத்தின் கதையை கிட்டதட்ட பாதிக்குமேல் சொல்லி அசத்தினார் வெங்கி.
சித்தார்த்-பிரியங்கா இருவரும் முதன் முதலில் காபி ஷாப்பில் சந்திக்கிறார்கள்.மெல்ல மெல்ல அது காதலாக மாறுகிறது. பெற்றோரின் சம்மதத்துக்கு காத்திருக்காத அவர்கள், திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் செல்கிறார்கள். ஜாலியாக கழிகிறது வாழ்க்கை. அந்த நேரத்தில் விதி குறுக்கிடுகிறது. சித்தார்த்துக்கு அச்சத்தை கொடுக்கிறளவுக்கு இருவரும் பிரிகிறார்கள். தனியே கலங்கி நிற்கும்போதுதான் வேறு இருவரை சந்திக்கிறான் சித்தார்த். அதன் பின் அவன் வாழ்க்கை மாறிவிடுகிறது. அந்த இருவரும் யார்? அவன் அடைந்த மாற்றம் என்ன? இதுதான் கதை என்றார் வெங்கி.
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன ஹ்ரிதய்ராஜ்தான் இந்த படத்தின் ஹீரோ. பிரபல மாடலிங் அழகி அதிதி என்பவர்தான் ஹீரோயின்.
வெங்கியும் நாசரும் நண்பர்களாம். அதுமட்டுமல்ல, இப்படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார் நாசர். கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், சொன்ன ஒரு விஷயம் நச்.
நடிகர்களுக்கு இருபது வயதில் மகன் இருந்தால் போதும். எப்போ அவனை ஹீரோவாக்குறீங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ஹீரோவாக்காமலிந்தால், பெரிய குற்றம் போல நினைக்கிறார்கள். இந்த படத்தில் நடித்திருக்கும் ஹ்ரிதய்ராஜ் பம்பாய் படத்தில் எனக்கு பேரனா நடிச்சிருந்தார். என் பேரன் ஹீரோவா அறிமுகமாகிற படத்தில் நான் நடிக்கிறேன்னு சொல்லிக்க வேண்டியதுதான் என்றார் நாசர். அப்புறம் அவர் தன் மனைவிக்கு காபி போட்டுக் கொடுத்த விஷயத்தையெல்லாம் சொல்லி, ஆடியன்சை சிரிக்க வைத்தது தனி டிராமா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?